”சமஷ்டி”தீர்வாகவே அமைய வேண்டும் பிரிட்டன் அமைச்சரிடம் சிறீதரன் எம்.பி. எடுத்துரைப்பு

தமிழ் மக்களுடைய நீடித்த நிலையான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்று பிரிட்டனின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்

கெதரின் வெஸ்டிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் எடுத்துரைத்துள்ளார்.

பிரிட்டனின் இந்து- பசுபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர்

கெதரின் வெஸ்ட்டை யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் அமைச்சராக பணிபுரிகின்றவரை நானும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்

சந்தித்து கலந்துரையாடினோம்.

பொறுப்பு கூறல் விடயங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பிலும் இன்றைய நிலைப்பாடுகள் என்ன? அரசாங்கத்தின் செல்நெறிகள் செயல்பாடுகள் என்பது தொடர்பில் பேசப்பட்டது.

தமிழ் மக்களுக்கான சிறந்த தீர்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அமைச்சர் குழுவினருக்கு மிகத் தெளிவாக கூறியிருக்கின்றோம். அந்த விடயங்களை அதிகமான கரிசனையோடு கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ் மக்களுடைய நீடித்த நிலையான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button