மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும்!

மொட்டுக் கட்சியுடன் மோத முற்பட்டால், விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்பதை எதிர்த்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது கட்சிக்கான ஆதரவும், மக்கள் கூட்டமும் அதிகரித்து வரும் அதேநேரம், பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அரசியல் செய்கிறோம். எமக்கு தனிப்பட்ட நோக்கங்கள் கிடையாது.
எனினும், சில அரசியல் கட்சிகள் அடக்குமுறையால்தான் அரசியல் செய்ய முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன.
இவர்களிடம் நாட்டை முன்னேற்றும் திட்டங்கள் எதுவும் கிடையாது.

இவ்வாறான செயற்பாடுகளினால், இந்த அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நேரம் போதவில்லை என்றே தெரிகிறது. சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றிய ஒருவர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டும்கூட, நாட்டில் கொள்கலன் பிரச்சினை இருந்துக் கொண்டுதான் உள்ளது.

அதேபோல், அநுராதபுரத்தின் விவசாயக் குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளர், நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்குவதாகக் கூறியும்கூட இன்னும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எமக்கு யாருடனும் மோத வேண்டியத் தேவைக்கிடையாது.

ஆனால், எம்முடன் மோத எவரேனும் ஒரு தரப்பு முற்பட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதையும் அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button