நான் மகிந்த என்பதை அநுர மறந்து விட்டார்
கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு எந்த நேரத்திலும் வெளியேறத்தயார் என தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ச பொது மேடைகளில் ஏறி தனக்கென பிரபல்யம் தேடுவதற்கு முயற்சிப்பதை விட உத்தியோகபூர்வ கோரிக்கையை எழுத்துமூலம் தமக்கு அனுப்புமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டுமெனவும் அல்லது அதற்கு மாதாந்தம் 46 இலட்சம் ரூபாவை வாடகையாக செலுத்துமாறும் பகி ரங்கமாக ஜனாதிபதி திசா நாயக்க உரை நிகழ்த்தியிருந்த நிலையில் டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதிராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லம் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில்அவரது பாதுகாப்பிற்காகவும், முன்னாள் அரச தலைவர் என்ற வகையிலும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானமெனவும் அத்துடன் அவ வருக்கு அரசியலமைப்பு ரீதியாக உரிமை வழங்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.
எவ்வாறாயினும், தான் வெளியேறுவதன் மூலம்ஜனாதிபதி பயனடைவார் என்றால், அதைக் காலி செய்யத் தயாராக இருப்பதாகவும் எதையும்தான் பலவந்தமாக வைத்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்அதேவேளை திசா நாயக்க தற்போது அரச தலைவராக இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்த ஒரு அரசியல்வாதியை விட அவரது நடத்தை வேறொன்றுமில்லை என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
“ஜனாதிபதி அநு ரகுமார திசா நாயக்க நான் மகி ந்த ராஜபக்ச ஷ என்பதை மறந்துவிடுகிறார். அவரது பேச்சுக்கள் காட்சியகத்திற்கு[கலரிக்கு] நல்லது மற்றும் அவர் தனது பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது போல் மக்களை தவறாக வழிநடத்தும் அதே வேளையில், எனது உத்தியோகபூர்வ இல்லத்தைஅவர் எழுத்து மூலமான கோரிக்கையை எனக்கு அனுப்பினால் காலி செய்ய நான் தயாராக உள்ளேன் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன். , முன்னாள் மிகவும் கொடூரமானகாலப்பகுதியில் 10 வருடங்கள் நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்நிர்வாகத்தில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றுக்கு அங்கீகாரம் கிடைத்ததன் பின்னரே எனக்கு விஜேராம மாவத்தையில் உள்ள இந்த இல்லம் கிடைத்திருந்த து,”என்றும் ராஜபக்ச கூறியுள்ளார் .
சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, ஜனாதிபதி திசாநாயக்க தனது பொதுதொடர்பாடல் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் மேடைகளில் , முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பையும் வீடுகளையும் பறிப்பதாகஅவர்களை விமர்சிக்கும் வார்த்தைகளை கட்டவிழ்த்துவிடுவதாகவும்தனது சொந்த தோல்விகளைப் பற்றி பேசுவதை தவிர்ப்பதற்காக க லரியில் விளையாடுவதாகவும் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
“நான் எப்போதும் தேசத்திற்காக உழைக்கும் அரசியல்வாதி மற்றும் தலைவராகும் . போரை முடிவுக்கு கொண்டு வருவது முதல் அபிவிருத்தியை கொண்டு வருவது வரை, நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொண்டு வந்த வளர்ச்சியால் இன்று நாடு பயனடைகிறது. எனக்கு பின்னர் [ஆட்சிக்கு] வந்தவர்கள்போராய் முடிவுக்கு கொண்டுவந்த எனது முயற்சிகளை விமர்சித்ததுடன் மற்றும் நான் கையொப்பமிட்ட முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கடுமையாக பாதித்த அபிவிருத்தித் திட்டங்களையும் சிலர் நிறுத்தினர்.
“அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். எனது அரச இல்லத்தை என்னிடமிருந்து பறிக்க வேண்டும் என ஜனாதிபதி திசாநாயக்க நினைத்தால், நான் வெளியேறத் தயார். வலுக்கட்டாயமாக எதுவும் வைக்கப்படவில்லை. அவர் எனக்கு உத்தியோகபூர்வ மாக கோரிக்கையை அனுப்பட்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
![]()