கவிதைகள்

கருகிய மூங்கில்கள்…. கவிதைகள்…. ஸ்ரீவாரிமஞ்சு

பற்றியெறிவதை
இசைத்திட
ஒற்றை மூங்கில் போதும்…
உரசிக்கொண்ட கற்களின்
தீப்பொறி
காற்றோடு கலந்து
உறவாடுகிறது…
சிறகுகள் பட படக்க
புகைக்குள் அலைமோதுகிறது
ஜோடி புறாக்கள்…
தனித்திருக்கும் நிலா
அவசர அழைப்பாய்
மேகக்கூடத்தோடு
பேசுகிறது….
கருணை மழை
பொழிந்தது
பற்றிக்கொண்டதும்
கருகியதும் உதிர்ந்து
கரைந்துகொள்கிறது
மண்ணில்….
கருகிய மூங்கில்கள்
முகாரி இசைத்துக்கொண்டிருகிறது
புலாங்குழலாகாது…
துளித் தீப்பொறி போதும்
வனமழிய….
ஸ்ரீவாரிமஞ்சு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *