முச்சந்தி

நல்லூர் உற்சவ கால நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் அவர்களின் தலைமையில் நேற்று தெய்வீகத் திருகூட்ட நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலாநிதி செல்வமனோகரன் அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதியாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் பண்டிதர் செஞ்சொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன் அவர்களும் கலத்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button