முச்சந்தி

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவின் ஆதரவு சஜித்துக்கு: எதிர்கட்சிகளுக்கு தாவும் பெரமுனவின் உறுப்பினர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த போதே அவர் தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (11) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இவர் கம்பஹா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மனைவியாவார்.

பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர் கடந்த அரசாங்கத்தின் கீழ், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கோவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.

பெர்னாண்டோபுள்ளே முன்பு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இவர் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button