முச்சந்தி

நெருக்கடியில் மத்திய கிழக்கு: இலங்கையர்களை அழைத்துவர அரசாங்கம் நிதி ஒதுக்கீடு

மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிப்பதால் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்காக 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும்,இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

சுமார் 12,000 இலங்கை தொழிலாளர்கள் இஸ்ரேலிலும், 15,000 பேர் ஜோர்தானிலும், 7,500 பேர் லெபனானிலும், சுமார் 500 பேர் எகிப்திலும் மோதல் வலயங்களில் பணிபுரிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் தலையீடு காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button