ஒலிம்பிக் போட்டிகளும் முத்தத்தால் எழுந்த சர்ச்சையும்

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து ஆறாவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் பெரிய மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை.

தொடர்ந்து 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 19 பதக்கங்களை பெற்ற சீனா முதலிடத்திலும், 8தங்கம், 10வெள்ளி, 8 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 26 பதக்கங்களை பெற்று ப்ரான்ஸ் இரண்டாம் இடத்திலும், 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 15 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது.

மேலும், முறையே அவுஸ்த்ரேலியா 4ஆம் இடத்திலும் பிரித்தானியா 5ஆம் இடத்திலும் கொரியா 6ஆம் இடத்திலும் காணப்படுகின்றன.

இது இவ்வாறிருக்க போட்டியாளர்கள் பலர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருவதோடு பலர் உலக சாதனைகளையும் பெற்று வருகின்றனர்.

Oruvan

சீன் நதி( seine River) தொடர்பில் புதிய சர்ச்சை

ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 26ஆம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பமான நிலையில், சீன் நதி( seine river) தொடர்பிலான பல சர்ச்சைகள் முன்னர் கூறப்பட்டது.

ஆனால், போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்நாட்களிலும் சீன் நதி தொடர்பிலான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் மேலோங்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அந்தவகையில், “மலம் நிரம்பிய” ஆறு என எக்ஸ் தளத்தில் அனிமேஸன் காணொளிகள் புகைப்படங்கள் என வைரலாகிக் கொண்டே செல்கின்றது.

பல புகைப்படங்கள் ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

இது சீன் நதியின் தரத்தை எடுத்துறைப்பதாகவும் அந்த பதிவில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனையும் தொடர்புபடுத்தி பல கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

சீன் நதியின் மாசுபட்ட நிலை தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. பிரெஞ்சு அரசியல் தலைவர்களும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும், நீச்சல் போட்டிகளை நடத்தும் அளவுக்கு செயின் சுத்தமாக இருந்ததாக உறுதி அளித்துள்ளனர்.

இது தொடர்பில் விளையாட்டு துறை அமைச்சர் அமேலி காஸ்டெரா சீன் ஆற்றில் நீச்சலை மேற்கொண்ட அது பொய் என நிரூபிக்க முயன்றிருந்தமையானது அந்நாட்களில் இணையத்தில் பெரும் வைரலானது.

முத்தத்தால் வந்த சர்ச்சை

Oruvan

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் விளையாட்டு துறை அமைச்சருக்கு மிகவும் நெருக்கமாக முத்தமிட்ட சம்பவமும் தற்போது பெரும் வைரலாக பேசப்படுகின்றது.

ஒலிம்பிக் தொடக்க நிகழ்வின் போது அவர்கள் இவ்வாறு செயற்படும் விதமானது மிகவும் அநாகரிகமானது எனவும் சமூக ஊடகத்தின் விமர்சகர்கள் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சீன் நதியில் நாளை நீச்சல் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு போட்டியாளர்களின் நிலை எப்படி இருக்கும் என சித்தரிக்கும் ஒரு புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *