கடவுளுக்கு காட்டப்படும் கற்பூரம்: பின்னணியில் இவ்வளவு காரணங்கள் இருக்கிறதா?

கடவுளை வணங்கும்போது கற்பூரம் மற்றும் பத்தி போன்றவற்றை காட்டுவார்கள். உண்மையில் இதையெல்லாம் எதற்காக காட்டுகிறோம் எனத் தெரியாமல் காட்டுவோம்.

கற்பூரம் என்பது தூய்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

கடவுளுக்கு ஏற்றப்படும் கற்பூரம் நம் மனதையும் இடத்தையும் தூய்மையாக்கி கடவுளை வணங்க தயாராக இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது.

அதேபோல் கற்பூரம் எரியும்போது அது ஒளியை வெளிப்படுத்துவதோடு, அறியாமையின் இருளை போக்கி, ஞானத்தின் ஒளியை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

கற்பூரத்தின் தனித்துவமான வாசனை மனதை அமைதிப்படுத்துவதோடு, நேர்மறை எண்ணங்களையும் தூண்டுகிறது.

அதேபோல் தாவரங்களிலிருந்து பெறப்படுவது கற்பூரம். இது இயற்கையின் சக்தியை பிரதிபலிக்கிறது.

கற்பூரம் என்பது ஐந்து முகங்களைக் கொண்ட சிவபெருமானுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

ஆய்வுகளின் படி, கற்பூரம் எரியும்பொழுது அது காற்றிலுள்ள நுண்ணுயிரிகளை கொல்வதாக கூறப்படுகிறது.

நாம் கடவுளிடம் கொண்டிருக்கும் அன்பு, பக்தி, நன்றியை கற்பூரம் ஏற்றுவதன் மூலம் வெளிப்படுத்த முடியும் எனவும் ஒரு நம்பிக்கை உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button