உலகம்

இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் தீ விபத்து: 15 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ (PIMS) குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் ஊடகத் தகவல்களின்படி, விபத்து நடந்தபோது அந்த அவசர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஜியோ நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நர்சரி அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் (AC) கம்ப்ரசர் வெடித்ததே இந்த கோர விபத்துக்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் குளிர்விக்கும் (Cooling) பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button