பூங்காவில் மழையின் தொல்லையால் மேட்டு நிலத்தை நோக்கி தப்பி ஓடிய யானைகள்!
தொடர் வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள யானைகள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அசாமில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் அங்குள்ள இடத்தை நீர் ஆக்கிரமித்துள்ளதால் அங்கிருக்கும் யானைகள் மேட்டு நிலத்தை நோக்கி தப்பித்து செல்கின்றன.
சுமார் 15 லட்சம் விலங்குகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன. 6 காண்டாமிருகங்கள், 94 மான்கள் உட்பட114 விலங்குகள் உயிரிழந்துள்ளன. காசிரங்கா தேசியப் பூங்கா மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கே உள்ள யானைகள் மேட்டு நிலப் பகுதிகளில் ஏறி உயிர் தப்பியுள்ளன.
தொடர் வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள யானைகள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![]()