800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பம் கண்டெடுப்பு
800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சாமுண்டி சிற்பத்தை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சோழண்டி கிராமத்தில் ஆய்வாளர்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின்போது சாமுண்டி சிலை கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையானது மூன்று அடி உயரம் உள்ளது. நான்கு கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ள சிலையில் சூலம், உடுக்கை, பாம்பு, கபாலம் ஆகியவை அக்கரங்களில் உள்ளன.
தலையில் கிரீடமும் அதன் பின்புறம் தீச்சுடரும் காணப்படுகிறது. இச்சிலை 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
![]()