வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம பெரஹெரா: யானை குழம்பியதில் 13 பேர் காயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது

யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த பார்வையாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button