திராட்சைகள் பரவ டைனோசர்களின் அழிவே காரணம்

கொலம்பியா, பனாமா மற்றும் பெரு உள்ளிட்ட நாடுகளில் 60 முதல் 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவ திராட்சை விதைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

9 வகையான திராட்சைகளின் புதைபடிவங்களை சிகாகோவிலுள்ள ஃபீல்ட் அருங்காட்சியகத்தின் உதவிக் கண்காணிப்பாளர் ஃபேபியானி ஹெர்ரெரா தலைியிலான குழு கண்டுபிடித்துள்ளது.

Oruvan

இந்த புதைபடிவ விதைகள் சிறியது என்றாலும் அதன் குறிப்பிட்ட வடிவம், அளவு, உருவவியல் அம்சங்களின் அடிப்படையில் அதனை கண்டுகொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.

இந்த கண்டுபிடிப்பானது டைனோசர்களின் அழிவுக்குப் பின்னர், உலகம் முழுவதிலும் எவ்வாறு திராட்சையின் வளர்ச்சி அதிகரித்தது என்பதற்கான காரணத்தைக் கண்டுகொள்ள உதவியுள்ளது.

பெரிய டைனோசர்கள் காணாமல் போனதால் வன சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டு, திராட்சைகள் போன்ற தாவரங்கள் வளரக்கூடிய சூழல்கள் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Oruvan

கொலம்பியாவின் ஆன்டிஸ் பகுதியில் சுமார் 60 மில்லியன் பழைமையான திராட்சை புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

‘Lithouva Susmanii’ எனப் பெயரிடப்பட்ட இந்த திராட்சை விதை புதைபடிவம் உலகின் மிகவும் பழையது. இதன் உள் கட்டமைப்பை உறுதிப்படுத்த சிடி ஸ்கேன் உள்ளிட்ட நுட்பங்களை ஆராய்ச்சிக் குழு பயன்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வு திராட்சையின் பரிணாம வளர்ச்சியை விளக்குவதோடு மட்டுமல்லாது, பல அழிவுகள் மற்றும் சிதறல்களினால் திராட்சை குடும்பத்தில் ஏற்பட்ட பின்னடைவையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த தாழ்மையான விதைகள் காடுகளின் பரிணாம வளர்ச்சி மற்றும் தாவர வாழ்வில் முக்கிய அழிவுகளின் தாக்கங்கள் பற்றி நுண்ணறிவை வழங்குகின்றன.

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button