நல்லூர் திருவிழாவுக்கு விசேட போக்குவரத்து

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா காலத்தில் எவ்வித போக்குவரத்துச் சிரமமுமின்றி மக்கள் வந்து செல்லக்கூடியவாறு விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க அரியாலையில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதியாக, நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா நடைபெற்று வருவதால், பக்தர்களின் வசதிக்காக விசேட பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 8 ஆம் திகதி நடைபெறும் தேர் திருவிழா காலத்திற்குள் எவ்வித போக்குவரத்துச் சிரமமுமின்றி மக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாத்து அரசாங்கம் தனது திட்டங்களை முறைப்படி முன்னெடுத்துச் செல்லும்.
![]()