நிகழ்வுகள்

இலங்கை பாடகர் சரிகமப புகழ் சபேஷனின் திருமணம்… (காணொளி)

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக Saregamapa தமிழ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான திறமையான பாடகர்கள் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர்.

நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும், தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் பாடி, தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்.

தனது இனிமையான குரல், பாடல்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் விதம் மற்றும் மேடைப் பாடலில் காட்டிய திறமை ஆகியவற்றின் மூலம் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இலங்கை பாடகர் சரிகமப புகழ் சபேஷனின் திருமணம்... இணையத்தில் வைரலாகும் காணொளி | Saregamapa Sabesan Got Married Video Goes Viral

குறிப்பாக, ஒவ்வொரு சுற்றிலும் தனது திறமையை நிரூபித்து வந்த சபேஷன், நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வரை முன்னேறி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

Saregamapa நிகழ்ச்சிக்குப் பிறகும் சபேஷனுக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது. அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது.

இசைத்துறையில் தொடர்ந்து பயணித்து வரும் அவர், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளிலும் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இலங்கை பாடகர் சரிகமப புகழ் சபேஷனின் திருமணம்... இணையத்தில் வைரலாகும் காணொளி | Saregamapa Sabesan Got Married Video Goes Viral

இந்நிலையில், சபேஷனின் வாழ்க்கையில் தற்போது ஒரு முக்கியமான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த தனது காதலியை சபேஷன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவரது திருமண புகைப்படங்கள்  மற்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button