கமலை சந்தித்த மனிஷா கொய்ராலா
இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வெளிவரவுள்ளது.
சென்னை, மும்பை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடந்த இந்தியன் 2 விழாவில் கமல் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதன்போது மும்பையில் நடந்த பட விழாவில் இந்தியன் திரைப்பட முதல் பாகத்தில் நடித்த மனிஷா கொய்ராலா கமலை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இருவரும் சந்தித்துக்கொண்ட வேளையில், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மனிஷா, “நான் இணைந்து நடித்த புத்திசாலித்தனமான மனிதர்களில் கமலும் ஒருவர். சினிமா பற்றிய அவரது புரிதல் இணையற்றது.
அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் என்னை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருப்பார்“ என பதிவிட்டுள்ளார்.
![]()