முல்லைத்தீவில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றி: சொக்லேட் உற்பத்தியில் புதிய முயற்சி

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர் செய்கையானது வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவு உற்பத்தி வகைகள் தயாரிக்கப்பட்டும் வருகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் கொக்கோ பயிர் செய்கையானது இடை , ஈர வலயங்களில் அதிகளவாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.

இருப்பினும் உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் ஒரு முயற்சியாக டாக் சொக்லேட் செய்யும் பரிட்சாத்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

கொக்கோ பயிர்மூலம் டாக் சொக்லேட் செய்யும் முறை பற்றியும் மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்னை முகாமையாளர் துமிலன் வழிகாட்டலுடனும், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் ஆலோசனையுடனும் , ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியர் அனோதினி சிவனேஸ்வரன் விளக்கமாக கூறியிருக்கின்றார்.

குறித்த கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதுடன் கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு , புரதம்,மாப்பொருள், நார்பொருள். அத்தியவசியமான அமினோ அமிலங்கள் என்பனவும் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

குறித்த கொக்கோ பயிர் செய்கையை முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Oruvan

Cacao

Oruvan

Cacao

Oruvan

Cacao

Oruvan

Cacao

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button