தங்கலான் பட வெளியீட்டு திகதியை அறிவித்த படக்குழு; வெளியான மிரட்டல் போஸ்டர்
தங்கலான் படம் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார்.
பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் அந்தப் படம் முதலில் ஜனவரி மாதம் வெளியாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் வெளியீட்டு திகதி தள்ளிப்போயிருக்கிறது.
கண்டிப்பாக இந்தப் படம் விக்ரமுக்கு ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்தை ஒஸ்கருக்கு அனுப்பவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதிய போஸ்டருடன் வெளியாகியிருக்கிறது.

![]()