அமெரிக்கா விளையாட்டுத் திடலில் மிகப் பெரிய ‘திடீர் பள்ளம்’

அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தின் அல்டன் நகரில் உள்ள காற்பந்து விளையாட்டுத் திடலில் மிகப் பெரிய ‘திடீர் பள்ளம்’ ஒன்று ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஜூன் 26ஆம் தேதி காலை நடந்தது. திடீர் பள்ளத்தால் விளையாட்டுத் திடல் கடுமையாக சேதமடைந்து. கிட்டத்தட்ட 30 மீட்டர் உயரம் உள்ள விளக்குகள் ஏந்திய மின்கம்பி, பலகைகள் பள்ளத்திற்குள் விழுந்ததாக கூறப்பட்டது.

‘திடீர் பள்ளம்’ ஏற்படும் போது விளையாட்டுத் திடலில் யாரும் இல்லை. அதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது. பள்ளம் கிட்டத்தட்ட 30 மீட்டர் அகலம் 15 மீட்டர் ஆழம் இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button