19 கிலோ கஞ்சாவை தின்ற எலிகள் – காவல்துறையின் அறிவிப்பால் நீதிபதி அதிர்ச்சி

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர்.

இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை, பழுதடைந்த கட்டடம் மற்றும் மழை காரணமாக கஞ்சா சேதமாகி விட்டது என்றும் கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்று விட்டது என்றும் கூறியுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த பதிலால் நீதிபதி அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. மேலும் காவல்துறையினர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதை அடுத்து கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button