உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர்… போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்கு விசாரணையில்…

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இயந்திரம் ஒன்று வழக்கறிஞராகத் தோன்றி வழக்குவிசாரணை ஒன்றில் வாதாடவுள்ளது.

DoNoPay என்ற நிறுவனத்தின் மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு அந்த இயந்திரம் “வழக்கறிஞராக” செயல்படுகிறது.

New York Post செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, அந்த இயந்திரம் முதல்முறையாக ஒரு போக்குவரத்துக் குற்றத்துக்கான வழக்குவிசாரணையில் வாதாடவிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

DoNoPay நிறுவனத்தை 2015இல் தோற்றுவித்த ஜோஷுவா பிரவ்டர் (Joshua Browder) என்பவர், தாம் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்ப்பதில் “வல்லுநர்” ஆனதாகக் கூறுகிறார்.

அதன் மூலமாக DoNoPay நிறுவனத்தைத் தற்செயலாக அமைத்ததாகவும் அவர் சொல்கிறார்.

அவரது நிறுவனத்தின் இலக்கு?

தேவைப்படுவோருக்கு இலவசமாகச் சட்டச் சேவைகளை வழங்குவது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button