“வடக்கின் ஒளிமயம்” யாழ்ப்பாணத்தில் மாபெரும் தொழிற்சந்தை
“வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் மாபெரும் தொழிற்சந்தை யாழ்ப்பாணத்தில் மிகவிமரிசையாக இடம்பெறவுள்ளது.
சர்வதேச ரீதியில் உள்ள பல நிறுவனங்களின் பங்கு பற்றுதலுடன், பெப்ரவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த தொழிற்சந்தை இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவின் பங்கேற்புடன் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் உயரதிகாரிகள், யாழ். மாவட்ட பதில் மாவட்ட செயலர் ம,பிரதீபன், யாழ்ப்பாண பிரதேச செயலர், யாழ். மாநகர சபை ஆணையாளர் , துறை சார் எனப் பலர் கலந்துகொண்டனர்.
குறித்த கூட்டத்தின் போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25,26ஆம் திகதிகளில் தொழிற்சந்தை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மாலை நேரங்களில் விசேட இசை நிகழ்வுகள் இந்திய கலைஞர்களின் பங்கு பற்றதலோடு இடம்பெறவுள்ளமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
![]()