சர்ப்பத்தின் விடுதலை!

நேபாளம் ‘சர்ப்பம்’ (‘The Serpent’) என அழைக்கப்படும் தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விரைவில் விடுவிக்க உள்ளது.
1970 களில் தெற்காசியாவில் ஹிப்பிப் பாதையில் பயணித்த மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை வேட்டையாடி கொன்றதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட “சர்ப்பம்” என்று அழைக்கப்படும் பிரெஞ்சு தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுவிக்க நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மற்றும் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற சோப்ராஜ், தாய்லாந்து, நேபாளம் மற்றும் இந்தியா முழுவதும் 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதுடன் தொடர்புடையவர்! போதைப்பொருள் கொடுத்து, கொலை செய்வதற்கு முன், அவன் அவர்களை கவர்ந்திழுத்ததாக கூறப்படுகிறது.
BBC/Netflix அவணப்பட தொடர் The Serpent உட்பட அவனது வாழ்க்கை வரலாறு பல திரைப்படங்களாகவும்
நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இது இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள மேற்கத்திய ‘பேக் பேக்கர்களை’ அவன் குறிவைத்து கொலை செய்ததை சித்தரிப்பதாகும்.
சோப்ராஜ் இந்தியாவில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 1976 முதல் இரண்டு தசாப்த கால சிறைத்தண்டனை அனுபவித்தான். இருப்பினும், டெல்லி சிறைச்சாலை கம்பிகளுக்குப் பின்னாலும் அவனது ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. சோப்ராஜ் சிறை காவலர்களுக்கு ரத்தினங்கள் மற்றும் பெரிய தொகைகளை லஞ்சம் கொடுத்தான், மேலும் மேற்கத்திய பத்திரிகையாளர்களுக்கு சுவாரசியமான தன் வாழ்க்கை பேட்டிகளை வழங்கினான், அதில் அவன் தனது கொலைகள் மற்றும் குற்றங்களை விரிவாக வேறு விவரித்தான்.
1986 ஆம் ஆண்டில், அவன் தங்கியிருந்த தனது சிறைச்சாலையின் “ஆடம்பரப் பிரிவில்” ஒரு விருந்தை ஏற்பாடுபண்ணி, அங்கு காவலர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து அவர்களை மயக்கமூட்டி சிறையில் இருந்து தப்பித்தான். இறுதியில் அவனை கோவாவில் போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
சோப்ராஜ் 1997 இல் விடுவிக்கப்பட்டு பாரிஸுக்குத் திரும்பினான். அங்கு அவன் பத்திரிகைகளுக்கு நேர்காணல்களை அளித்து அதற்கு பெரும் தொகையை வசூலித்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தான். ஆனால் 2003 இல், அவன் ஏனோ நேபாளத்திற்குத் திரும்ப முடிவு செய்தான். அங்கு அவனுக்கு நிலுவையில் உள்ள ஒரு கைது வாரண்ட் இருந்தது.
1975 இல் 29 வயதான அமெரிக்கரான கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொன்றதற்காக சோப்ராஜ் நீண்ட காலத்திற்குப் பிறகு 2003ல் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு 2004 இல் ஆயுள் தண்டனை பெற்றான்.
1975 ஆம் ஆண்டு 26 வயதான கனேடியரான லாரன்ட் கேரியரை கொலை செய்த வழக்கில் அவன் 2014 இல் தண்டிக்கப்பட்டான்.
தற்போது 78 வயதாகும் சோப்ராஜை வயது அடிப்படையில் விடுதலை செய்ய நீதிமன்றம் 21 புதன்கிழமை 2022 உத்தரவிட்டது. சோப்ராஜின் வழக்கறிஞர் லோக் பக்த ராணா, “அவன் 15 நாட்களுக்குள் நாடு கடத்தப்படுவான். அதற்கான ஆயுத்தங்கள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
2008 ஆம் ஆண்டில், சிறையில் இருந்தபோது, சோப்ராஜ் நேபாளப் பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை மணந்தார், அவர் அவரை விட 44 வயது இளையவரும் அவரது வழக்கறிஞரின் மகளும் ஆவார்.

https://www.youtube.com/watch?v=4RdCDxP67cc

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button