கவிதைகள்

பொருத்திருப்போம் நாம்!… சங்கர சுப்பிரமணியன்

வஞ்சியுனைக் காணாது வாடி நிற்கிறது மனம்
வாவென்று அழைத்திடவும் திடம் இல்லை இன்று
அழைக்காததாலே அன்பில்லை என எண்ணிடாதே
வாவென்று அழையாவிடினும்
கைபேசியில் அழைக்கிறேனே

தோகையுனைப் பாராது படபடக்கிறது மனம்
பார்த்திடக் கூப்பிடவும் பதைக்கிறது மனம்
பார்த்திடாது இருப்பதால் பாசம் இல்லையென எண்ணாதே
நேரில் பாராவிடினும் கைபேசியில் பார்க்கிறேனே

அருகருகே அமர்ந்து பேசாமல் அலை பாய்கிறதென் மனம்
அருகருகே அமர்ந்து பேச வாய்ப்பில்லாது போனாலும்
உன்னால் நானும் என்னில் நீயும் இருபதே அருகாமையன்றோ
அறிந்திருப்பாய் அன்பே அதைச் சொல்ல தேவையில்லையன்பே

ஆதவன் என்ன அருகிலா இருக்கிறான்
தாமரை அவனருகில் இல்லாது போனாலும் மலரவில்லையா?
சந்திரனும்கூட அருகில் இல்லையே
ஆனாலும் அல்லி அழகாய் மலர்கிறதே

அறைகுறை மேகத்தினூடே முழுமதி ஒளிதராது
அறைகுறையா முகம்தெரிந்தால் பார்த்து பலனுமிரது
இடைவெளி விட்டு நின்றால் கைகளும் இணைந்திடாது
தடை ஒருநாள் விலகுமென்றே
பொருத்திடுவோம் நாம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *