எங்கு கற்றீர்?… சங்கர சுப்பிரமணியன்.

காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது
கன விலங்குகள் அழிந்து மடிகின்றன
பசுவதைபேசும் பண்பாளர் நாமெல்லாம்
பாழும் உயிர்கள் மாண்டதை எண்ணி வருந்தினோமா
எல்லோரும் ஓலமிட்டால் ஓலமிடுவோம்
ஆரவாரித்து மகிழ்ந்நால்
அதையே நாமும் செய்வோம்
மாற்றி யோசிக்கும் மகிமை அறியோம்
மாற்றி யோசித்து மாண்பு சொன்னாலதை மறுத்திடுவோம்
குப்பைக் கருத்துக்களை கோபுரமேற்றி துதிப்போம்
ஒப்புவன சொன்னாலதை ஒதுக்கி வீதிதள்ளுவோம
எப்பவுமே ஏற்கவொன்னாததை
ஏற்றிப்பிடிப்போம்
தப்பென சொன்னாலவரை உடனே வெட்டிமுறிப்போம்
கற்பனையால் வந்தவற்றை கரம் தொழுதே ஏற்போம்
விற்பனை அதைச்செய்வதற்கும்
வெகுவழி நடப்போம்
கற்பன பால்நின்று ஒருபோதும் கனநேரம் நினையோம்
சொற்பவும் சுயசிந்தையின்றியே சொன்னவர் பின் செல்லுவோம்
உயிரென்றால் இங்கு எல்லா உயிரும் ஒன்றே
உயர்வென்றும் தாழ்வென்றும் ஏதுமிங்கில்லை
மனிதரில் உயர்வென்றும் தாழ்வு என்று சொல்வதைப்போல்
மாக்களிலும் உயர்வு தாழ்வு சொல்ல எங்கு கற்றீர்?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()