கவிதைகள்

கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தால்!… சங்கர சுப்பிரமணியன்.

உண்மைச் சுடும் என்பதும் பொய்யோ
உணர்த்துவதை தடுப்பதுதான் மெய்யோ
ஒருவருக்கு துன்பமெனில் அவன் வந்தது மெய்யோ?
உலகமே துன்புறும்போது அவன் வராததும் பொய்யோ

கருத்ததை சொன்னால் இங்கு புத்திசொல்வோர்
கருத்தை கருத்தொடு களமதில் காணமாட்டார்
அஞ்ஞானத்தை நம்பி நம்பி அழிந்தது போதும்
விஞ்ஞானம் வேண்டாமென வின்னில் மட்டும் பறப்பார்

எல்லாம் அவன் தந்தது இம்மண்ணில் என்பார்
கொரோனாவும் அவன் தந்ததா என்றால் கோபம் கொள்வார்
தனக்குத்தான் உலகில் அக்கறை போல் காட்டுவார்
மற்றவர் கருத்தை மதியாமலதை
மழுங்கடிக்க முனைவார்

அஞ்ஞானமும் விஞ்ஞானமும் உண்டென்பதறியார்
கற்றகல்வி மறந்து உலகம் தட்டையெனவே சொல்வார்
பாரெல்லாம் பதைத்து மடிந்துமிங்கே கிடக்கையிலே
பாற்கடலில் அமுதைக் கடைகிறார் வருமென்பார்

தான் மட்டும் மதத்தை காப்பதாய்
எண்ணிடுவார்
குறை சொன்னால் ஏற்காமல் மறையைச் சொல்வார்
கண்ணிருந்தும் குருடராக நாம் வாழ்வதைச் சொன்னால்
கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்ல கருத்தென்பார்?

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *