பென்ரகனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் அமெரிக்கர்கள் கோழைகளே…. ஏலையா க.முருகதாசன்

அமெரிக்க அரசியல் கட்டமைப்பும் அமெரிக்க மக்களும் கோழைத்தனமானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஏனெனில் அவர்கள் பென்ரகனுக்குப் பின்னாலும்,ரொக்கட்டுகளுக்குப் பின்னாலும் ஆயுதங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டு சண்டித்தனம் காட்டுபவர்கள்.
இயல்பான மன உறுதி கொண்டவர்கள் அல்ல இவர்கள்.இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கின்ற டிரம்ப் ஒரு தெருச்சண்டியன் போல மிகவும் மலிவான மனிதராகிவிட்டார்.
எப்ஸ்டீனின் இரகசியக் கோர்வையில் இவருடைய ஒழுக்கக் கேட்டு விபரங்கள் இருப்பதை கண்டறிந்து அதைத் துடைத்தெறிய தான் ஒரு மகோன்னத மனிதன் என்பதைக் காட்டவுமே ஈரான் வழியாக உலகை அச்சுறுத்தலாம் தனக்கு எதிரான கருத்தை இல்லாமல் செய்யலாம் என படாதபாடு படுகிறார்.
ஒரு ஜனாதிபதிக்குரிய எந்த அறிவாளுமையும் அவரிடம் கிடையவே கிடையாது.அமெரிக்கா இயற்றி வைத்திருக்கின்ற சட்டங்களில் மறுபேச்சின்றி அமெரிக்க ஜனாதிபதி ஆணையிடுவதை முப்படைகளும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதற்கான வரையறைக்குப்படுகின்ற சட்ட இயல்பு அந்நாட்டின் ஜனாதிபதிகளை காப்பாற்றி வந்திருக்கிறது,அதுதான் இன்றும் நடக்கிறது.
உலகம் நீண்ட காலத்துக்கு,உலக நாடுகள் எதுவாகவிருந்தாலும் அந்த நாடுகள் பரப்புரை செய்கின்ற விடயங்களை நம்பிக் கொண்டிருக்காது.
அது உண்மையா பொய்யா என்று ஆராயத் தெபாடங்கும். தங்களை முதன்மைப்படுத்தி தாமே நவீனத்தின் உச்சாணிக் கொம்பு என்று சொன்னாலும் அதையும் உலகம் அது உண்மைதானா என்பதை ஆராயத் தொடங்கும்.
பொய்களும்,கற்பனைக் கதைகளும்,வியக்க வைக்கும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட செய்திகளும் நாளொன்றுக்கு வகைதொகையாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன.
வாசிப்போரில் நூற்றுக்கு எழுபத்தைந்து வீதமானோர்.தாம் வாசிப்பவற்றில் காணப்படும் உள்ளடக்கம் பற்றிய உண்மைகளை துருவித்தருவி ஆராய்ந்து அது சம்பந்தமான உண்மைகளை தேடிச் செல்பவர்கள் அல்ல.நாளாந்த வாழ்வின் தேவைகளுக்கு மத்தியிலும் அதனால் எற்படும் இடர்ப்பாடுகள் அலைக்கiழிவுகளுக்கு மத்தியில் போகிற போக்கில் செய்திகளை வாசிப்பவர்கள்,தாம் வாசித்தவற்றை நேரம் கிடைக்குமாயின் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவார்கள்.

இந்தப் பகிர்ந்து கொள்வது விசயத்தைக் கேள்விப்பட்டீர்களா அறிந்தீர்களா என்ன இருந்தாலும் அவன் கெட்டிக்காரன்,அவர்கள் கெட்டிக்காரர்கள் என்றும் செய்திகளின் தளம் ஒரு நாடானால் அந்த நாடு பற்றி ஏற்கனவே ஒவ்வொருவர் மூளைக்குள்ளும் கட்டமைக்கப்பட்டிருக்கும்
மூளைக்குள் பதிந்திருக்கும் நாடுகள் பற்றிய மக்களின் திடமான நம்பிக்கையும்,எதையெல்லாம் மக்கள் வியப்புடன் நோக்குகிறார்களோ அதுசார்ந்த அபிப்பராயமும் மக்களின் பார்வைக்குட்பட்ட அரசியல் தொடங்கி விஞ்ஞானம் வசரையிலாக அவர்களுள் கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் அபிப்பராயம்,நம்பிக்கை போன்றவற்றை அவர்ளாகிய குழுத்தன்மையின் தனியொருவரிலிருந்து இன்னொருவருக்கு பல்வேறு ஊடகஙக்ளான அச்சு ஊடகங்கள்,வானொலி தொலைக்காட்சி இணையத்தளங்கள் திரைப்படங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைகின்றன.
இதுதவிர மக்கள் ஒருவரோடு ஒருவர் சந்திக்கும் போது கலந்துரையாடுவதன் மூலமும்நாடுகள் ; பற்றிய வல்லமையான நாடு என்ற ஒரு கற்பனை விம்பம் உண்மையானதாகப் பதிந்துவிடுகின்றன.
அப்படி உலக அபிப்பராயமாக பதியப்பட்ட உண்மை ஐம்பது வீதமும் அந்நாடு பற்றிய பொய்யான விம்பம் ஐம்பது வீதமுமாக உலக நாடுகளுக்கு தலைமைதாங்கும்வல்லரசு எனக் ; கொண்டாடப்படும் நாடு அமெரிக்கா என்பதேயாகும்.
அமெரிக்காவின் இத்தகு உலகின் பார்வை பொதுச்சிந்தனை வாயிலாகவம் தனிமனிதச் சிந்தனை வாயிலாகவும் அமெரிக்காவைவிட உயர்ந்த நாடு இல்லையெனக் கொண்டாடும் நிலை தோன்றியள்ளது.
அமெரிக்காவை மகோன்னத நாடு என எண்ண வைக்கின்ற ஒரு செயல்திட்டமாக கொலிவூட் திரைப்படங்கள் பிரமாண்டத்துக்குச் சான்றாக முன்னிலை வகிக்கின்றன.
இப்படங்கள் யாவும் தயாரிப்பாளர்களின் முடிவுக்கேற்ப தயாரிக்கப்படுவதும் இல்லை.அமெரிக்காவின் சட்டங்களில் சமாந்தரமாக இரண்டுவித இணுகுமுறை உண்டு. ஒன்று தனிமனித சுதந்திரம் அச்சுதந்திரத்தின் ஊடாக அமெரிக்காவை வல்லாதிக்கஎ நாடாக முன்னிலைப்படுத்தவதற்கான சட்டங்கள்.
அதனால் நவீன திரைத்துறை வலையமைப்பின் ஊடாக வியப்புக்குரிய பிரமாண்ட படங்களை தயாரிப்பது மட்டுமல்ல,உலகின் திரைத்துறைச் சந்தையில் தொடர்ந்தும் தாம் ஆதிக்கம் செலுத்தும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவுக்குச் சமனாக ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் விஞ்ஞானத்திலும் பிரமாண்ட செயல்பாடுகளிலும் மிகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன:
அமெரிக்கா மக்கள் கோழைகள் என்பதற்குச் சான்றாக அவர்கள் அறம் சார்ந்தவர்கள் அல்ல.அறம் சார்ந்த மனிதர்களிடம் மட்டுமே மற்றவர்களை அடக்க நினைக்காத வீரம் இருக்கும்.இவர்கள் பெண்ரகனுக்குப் பின்னாலும் ரொக்கட்டுகளுக்குப் பின்னாலும் ஆயுதங்களுக்குப் பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைகள் என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவறான ஒரு ஜனாதிபதியை அப்புறப்படுத்த தகுதியற்றவர்கள் அமெரிக்கர்கள்.ஈரான் போரில் ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக திரண்டெழுந்து அவரின் செயலை எதிர்த்ததும் ஒரு நடிப்புத்தானோ என நினைக்aகத் தோன்றுகின்றது.
இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஈரானுடன் போரிடுவது எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் நியாயமே இல்லை.அணுவாயுதத்தை எந்த ஒரு நாடும் பயன்படுத்தக்கூடாதெனில் அமெரிக்காவும் அதனை வைத்திருக்கவே கூடாது.
அமெரிக்க மக்கள் கோழைகளே!
![]()