முச்சந்தி

வைத்தியருக்கும் பெண்ணுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்!; வெளியாகும் பல ஆதாரங்கள்!

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பெரியவிளான் நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்த சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பணியாளர்களை அழைத்து சென்று அந்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பின இராமநாதன் அர்ச்சுனாடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா, தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை திடீரென எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டல் விடுத்தார்.

இவ்விடயம் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இராமநாதன் அர்ச்சுனா வைக்கப்பட்டுள்ளார்..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *