கவிதைகள்

வலிகளின் மொழி–கோறோணா!… பொலிகை ஜெயா.

பின்னிரவுத்தூக்கம் தூரத்தே
தேடுகிறது மனசு தூக்கத்தை
வாழ்வு இலகுவாயில்லை
உணவுமிருக்கவில்லை 
மனதில் துயர் முட்டி மோதுகிறது
நீரற்ற மண்போல வரண்டுவிட்டது
புன்னகை ததும்ப பேச இயலாமை
படுக்கையை மனைவி பகிரமுடியாமை
பிள்ளையை ஆசைக்கு அணைத்திட
தடைபோட்டது கோவிட்-19
கண் காணாத எமனாய்
சுற்றுகிறது சுதந்திரமாய் கொறோணா
உலகப்பலிகள் பல லகரமாச்சு
சுதந்திர வீட்டுச்சிறை
மனவழுத்தம் பாரமாய் தொக்கிற்று
நாளை எப்படி நகரும்
என்ற கேள்வியுடன் — மானிடம்

சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *