நல்வழி பிறக்குமென நம்பியிருந்தார்!…. சங்கர சுப்பிரமணியன்.

நெடுநேரம் நின்று நீண்ட கதை பேசியவள்
சிறிதுநேரம் நின்று குறுங்கதை
பேசுகிறாள்
மடிமீது தலைவைத்து வானம் பார்த்து கிடந்ததவளும்
தொடுவானம் போல இப்போ
தொலைவிலேயே நிற்கின்றாள்
நீயின்றி நான் இல்லையென்று நெடுநாள் சொன்னவள்
நாமிருக்க வேண்டுமென்றால் எட்ட இரு என்கின்றாள்
முத்தமொன்று கேட்டபோது முடியதென சொல்லாதவள்
சத்தமில்லாமலின்று சறுக்கென மறைந்து போகின்றாள்
உன்மூச்சே என்மூச்சென்று முன்னே நின்றவனும்
நம் மூச்சு இப்போ கலக்க வேண்டாம் என்கின்றான்
ஈருயிர ஓருடல் என்று கவிதை சொல்லி வந்தவனும்
வேறுயிரேய் இருப்போமென விலகிச் செல்கின்றான்
உன்கண்ணில் நீர் வடிந்தால் என் கண் நீர் வடிக்குமென்றான்
நம் கண்கள் நீர் வடிக்காதிருக்க
நாம் விலகியிருப்போமென்றான்
என்னால் முடியலையே என்றவள் மன்றாடி கேட்டபின்னும்
தன்னாலும் முடியதென்றே வேறு
வழியில்லை என்றான்
காலங்கள் மாறுமென்றான் காத்திருப்போமென்றான்
அவ்வாறே இருப்போமென்றாள்
கொஞ்சநாளில் மாறுமென்றாள்
கொரோனாவை நாம் ஒழிப்போம் என்றார்
சோர்ந்திடுவோம் நல்வழி பிறக்கும் என்றே நம்பியிருந்தார்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()