இலங்கை

நாடுகடந்த சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை – அமெரிக்கா அதிரடியான கூட்டணி!

இணையம் சார்ந்த மோசடிகளை முறியடிப்பதற்காகவும், நாடுகடந்த குற்ற வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்காகவும் இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான தனது ஒத்துழைப்பினை அமெரிக்கா பலப்படுத்துகிறது.

இலங்கையில்இயங்கி வரும் மோசடி மையங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் இலங்கை

சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்க அரசின் புலனாய்வுப் பணியகமான Federal Bureau of Investigation (FBI) இன் Charlotte Field Office இனைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்கிறது.

ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு உதவி செய்வதற்காகவும், விசேடதொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதற்காகவும், நாடுகடந்த மோசடி வலையமைப்புகளை

இனங்கண்டு, அவற்றை சீர்குலைப்பதற்கான அமெரிக்க மற்றும் இலங்கை அதிகாரிகளின்திறனை பலப்படுத்துவதற்காகவும் ஒரு பிரத்தியேக குழுவை எப் பி.ஐ (FBI)நிறுவியுள்ளது.

இவ்விஜயத்தின் போது, புலனாய்வு நுட்பங்கள், டிஜிட்டல் தடயவியல் மற்றும் வழக்குஉருவாக்கம் போன்ற விடயங்களில் இலங்கையின் சட்ட அமுலாக்கத் துறையினைச் சேர்ந்த பங்காளர்களுடன் இணைந்து எப்.பி.ஐ.அதிகாரிகள் பணியாற்றுவர்.

“வெளிநாடுகளில் செயற்படும் குற்ற வலையமைப்புகளைச் சேர்ந்த கும்பல்கள், பில்லியன்கணக்கான டொலர் பணத்தைத் திருடி வருகின்றன. அவர்களைத் தடுப்பதற்கு நாங்கள்

உறுதிபூண்டுள்ளோம்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *