முச்சந்தி

குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி!; பொலிஸாரிடம் வெளியிட்ட உண்மை காரணம்

நக்கிள்ஸ் பகுதியில் குகையொன்றில் தங்கியிருந்து 15 வயது சிறுமியொருவர் குழந்தை பிரசவித்து இரண்டு மாதங்களாக வாழ்ந்து வந்த சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நக்கிள்ஸ் வனப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குகை ஒன்றில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் என கூறப்படும் 23 இளைஞரையும், மற்றுமொரு 35 வயது இளைஞரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அந்த குழந்தை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிறந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு

குழந்தையின் தாயான 15 வயது சிறுமி, ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல்போயிருந்தமை தொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி! பொலிஸாரிடம் வெளியிட்ட உண்மை காரணம் | 15 Year Old Girl Gives Birth In Cave Reason

கடையொன்றில் ஒரு நபரின் தினசரி தேவைக்கு அதிகமாக அரிசி வாங்கிய இளைஞர் மீது பொலிஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை பின்தொடர்ந்த நிலையில், குகைக்குள் இரண்டு மாத குழந்தையுடன் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை என கூறப்படும் 23 வயது இளைஞர், ஐந்து இலட்சம் ரூபாய் தனிநபர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம், அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் இளைஞரின் 35 வயது உறவினர், இந்த மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு குகையில் பிரசவம் நிகழ்ந்துள்ளதாகவும், கித்துல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு தொப்புள் கொடி பிரிக்கப்பட்டுள்ளது.

 

காட்டிலிருந்து பெறப்பட்ட மூலிகை மருந்துகளைக் கொண்டு தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதும், கித்துல் தேனை உருக்க பயன்படுத்தப்படும் பானையில் குழந்தை சுத்தப்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளியான காரணம்

 

இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திடீரென ஏற்பட்ட கர்ப்பத்தின் காரணமாக, ஐந்து மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர், இளைஞரின் உறவினர் வீட்டில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த பிறகு, நான்கு மாதங்களுக்கு முன்பு குகைக்கு குடிபெயர்ந்ததாகவும் கூறியுள்ளனர்.

குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி! பொலிஸாரிடம் வெளியிட்ட உண்மை காரணம் | 15 Year Old Girl Gives Birth In Cave Reason

சிறுமிக்கு 15 வயது என்பதால், அவர்கள் சமூகத்திடமிருந்து மறைந்து வாழ முடிவு செய்ததாகவும், இந்த சம்பவம் பொலிஸாருக்கு தெரியவந்துவிடும் என்பதால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் மத்தியிலும் அவர்கள் அந்த குகையிலேயே தங்கியிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும் மகளும் நலமாக உள்ளதாகவும், அவர்கள் தடயவியல் மருத்துவர் முன் முன்னிலைபடுத்தப்பட்டு அறிக்கை பெறப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த இரண்டு குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தையும், அவர்களின் எதிர்கால நல்வாழ்வையும் உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து விதமான தலையீடுகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *