கட்டுரைகள்

எழுத்துலகுக்கு சர்வாதிகாரிகள் என்று எவருமில்லை… ஏலையா க.முருகதாசன்

ஏலையா க.முருகதாசன்

நான் அறிந்தவரையில் எழுத்துலகப் பரப்பினில் எழுத்தாளர்கள் பற்றியும் எழத்துக்கள் பற்றியும் அவரவர் அபிப்பராயங்களை தாம்தாம் மட்டும் சிறந்த எழுத்தாளர்கள் தமது எழுத்துமுறையே தரமானது என அணிசேர்த்துக் கொண்டு விமர்சனம் செய்வதை நான் ஊரிலிருந்து போதிருந்து இன்றுவரை கண்டு வருகிறேன்.

ஒரு எழுத்தாளனை எள்ளிநகையாடி விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை,அப்படிச் செய்பவரின் எழுத்தியல்புதான் உறுதியான இறுதியான வரைவிலக்கணமுமல்ல.

எழுத்துலகில் குழு நிலை இன்றும் தொடர்கிறது.நான் ஊரில் இருந்த போது படிக்கிற காலத்தில் நான் இரசித்து மகிழ்ந்த எழுத்தாளர்கள் என முதல் நான் இது என்னுடையது என்று என்னை மகிழ வைத்தது திரு.டொமினிக் ஜீவாவின் கதைகள்,திரு.அ.செ.முருகானந்தனின் கதைகள் இதைவிட அன்றைய நாட்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த செம்பியன் செல்வன் (திரு.இராஜகோபால் ) செங்கை ஆழியான்(திரு.செ.குணராசா) ஆகிய இருவரும் கிழமைக்கு ஒருவராக சுதந்திரன் பத்திரிகையில் பேராதனைப் பல்கலைக்கழக வாழ்க்கை பற்றி ‘நிழல்கள்’ என்ற பெயரில் தொடர்கதை எழுதியிருந்தார்கள்.ஆனால் இருவரின் எழுத்து முறைகளும் முழுவதுமே வேறுபட்டவை வித்தியாசமானவை.

எந்தவொரு .எழுத்தாளனோ கவிஞனோ ‘நானே பெரிய எழுத்தாளன் ‘ என்று எழுத்துலகை உரிமை கொண்டாட முடியாது.

நீங்கள் குறிப்பிட்டது போல ஊடகங்களும் பத்திரிகைகளும் எழுதுபவரின் எழுத்தாக்கத்தின் சிறப்பைக் கணக்கிலெடுப்பதைவிட் அவர்களின் கல்வித்தகுதி பிரபலத்தன்மையை கணக்கிலெடுத்துத்தான் ஆக்கங்களைப் பிரசுரிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.அது உண்மையுந்தான்.

இது உண்மையோ பொய்யோ தெரியது ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறது கீழ்வரும் செய்தி

‘கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை ஒரு பாடசாலைக்கு சொற்பொழிவாற்றப் போயிருந்த போது தான் எழுதிய கவிதையை ஒரு மாணவனிடம் கொடுத்ததுடன் மாணவன் எழுதிய கவிதையை தான் வைத்துக் கொண்டார்.கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதையை அந்த மாணவன் மேடையில் வாசித்த போது அதை யாருமே கண்டு கொள்ளவும் இல்லை கணக்கிலெடுக்கவும் இல்லை.அதே வேளை மாணவன் எழுதிய கவிதையை கவிஞர் கண்ணதாசன் மேடையில் வாசித்த போது அவர் பிரபல கவிஞர் என்பதற்காக சபையோர் தொடக்கம் அனைவருமே அவரைப் பாராட்டி புகழ்ந்தார்கள்.

பின்னர் கவிஙர் கண்ணதாசன் தான் மாணவனின் கவிதையைத்தான் வாசித்தாகச் சொன்னதாக ஒரு செய்தியை வாசித்தேன்.அது உண்மையா பொய்யா என்பதைவிட பிரபலங்கள் சொல்வதை எழதுவதை ஆகா ஓகோ என்று சொல்லும் போலிப் போக்கு தமிழ் இலக்கிய உலகில் இருக்கவே இருக்கின்றது.தமிழிலக்கிய உலகில் இவரை விட்டால் எவரும் இல்லை என்று எவரும் இல்லை.கவிஞர் கண்ணதாசனைவிட ,கவிஞர் வைரமுத்துவைவிட திரைப்படத் துறையோடு தொடர்புடைய சிறந்த எழுத்தாளுமை உள்ள கவிஞர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். வண்டில் சில்லை இறுக்கிப் பிடிக்க இரும்பு வளையத்தை விரிவடையச் செய்ய இரும்பு வளையத்தின் மேலே ஓலைகள் விறகுகளைப் போட்:டு எரித்ததன் காரணம் சூட்டில் இரும்பு விரிவடையும் என்பதை மக்கள் அறிந்ததும் விஞ்ஞானச் சிந்தனைதான் .விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளும் சிந்திக்கும் திறனும் எப்போதோ அதாவது கல்லோடு கல்லை உரஞ்சினால்; எழும் தீப்பொறியிலிருந்து தீயை உருவாக்கலாம் என்ற போதே ஆரம்பித்துவி;டது.

அது போலத்தான் கவிதையுட்பட எழுத்துலகும் அதைத்தான் திரு.கோ நாதன் அவர்களும் ஒருவரை உதாரணப்படத்தி குறிப்பிட்டிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *