பலதும் பத்தும்

67 முறை தொடர்ச்சியாகச் சுழன்று கின்னஸ் சாதனை – அசத்திய சிறுமி!

ஜப்பானைச் சேர்ந்த வெறும் 9 வயது சிறுமி சுசு ஹேபரு, வான்வளையத்தில் (Aerial Hoop) ஒரே நிமிடத்தில் 67 முறை தொடர்ச்சியாகச் சுழன்று குட்டிக்கரணம் அடித்து கின்னஸ் உலக சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சிறுவயதிலிருந்தே வித்தியாசமான சாகசக் கலைகளில் ஆர்வம் கொண்ட சுசு, தனது நான்கு வயதிலிருந்தே வான்வளையப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
இந்தக் கலையின் மீதான ஆர்வம் அவருக்கு இயல்பாகவே உருவாகவில்லை.மாறாக, இக்கலையில் ஈடுபட்டு வந்த தனது மூத்த சகோதரி சாராவின் திறமைகளையும் பயிற்சிகளையும் பார்த்தே சுசுவுக்கு இதன் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் தீவிரப் பயிற்சியின் மூலம் தனது திறமையை வளர்த்துக்கொண்டு, இன்று உலக சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்தச் சாதனை நிகழ்வில் சுசுவின் சகோதரி சாராவும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.அவர் தனது கழுத்தைப் பயன்படுத்தி வெறும் 30 விநாடிகளில் 62 முறை சுழன்று மற்றொரு கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

இதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளும் தங்களது தனித்துவமான திறமைகளால் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்… நழுவிச் சென்ற பெண் பிரதமர்!
அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்… நழுவிச் சென்ற பெண் பிரதமர்!
தனது சாதனை அனுபவம் குறித்துப் பேசிய சுசு, 67 முறை தொடர்ச்சியாகச் சுழன்றபோதும் தனக்குத் தலைச்சுற்றல் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.இருப்பினும், வான்வளையத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர் வழக்கம்போல் நடப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 50 முறை சுழன்றதற்குப் பின்னர் தொடர்ந்து அதே வேகத்தையும் உடல் கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக்கொண்டு சாதனையை நிறைவு செய்வது மிகவும் சவாலானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவயதிலேயே கடினமான பயிற்சி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் உலக அளவில் சாதனை படைத்துள்ள சுசு ஹேபரு, தனது திறமையால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இத்துடன் தனது சாதனைப் பயணத்தை நிறுத்திக்கொள்ள விரும்பாத சுசு, எதிர்காலத்தில் மேலும் பல கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து தனது திறமையை உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என்பதையே தனது இலட்சியமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *