பலதும் பத்தும்

25000 எலிகள் நிறைந்த கோவில் – பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு!

இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் பல கோவில்கள் தனித்துவமான வரலாறு, வியக்க வைக்கும் கட்டடக்கலை மற்றும் வித்தியாசமான வழிபாட்டு மரபுகளால் புகழ்பெற்றவை என்றால் மிகையாகாது.

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இவை அனைத்தையும் தாண்டி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதற்குக் காரணம், அந்தக் கோவிலில் தாராளமாகச் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். சற்று வியப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

இந்தக் கோவிலின் வளாகம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் சுதந்திரமாக உலவுகின்றன.பொதுவாக எலிகளைக் கண்டால் அச்சத்துடன் விலகிச் செல்லும் மனிதர்கள், இங்கு அவற்றை மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் நடத்துகின்றனர்.

கர்ணி மாதா கோவில்’ என்று அழைக்கப்படும் இந்தப் பழமையான ஆலயம், ஒரு முக்கியமான புனித யாத்திரைத் தலமாக மட்டுமின்றி, ராஜஸ்தானின் தனித்துவமான கலாச்சார மரபுகளின் அடையாளமாகவும் அறியப்படுகின்றது.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

எங்குள்ளது?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஷ்னோக் பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் ஞானியான கர்ணி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், அப்பகுதி மக்களால் மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. கர்ணி மாதா துர்கா தேவியின் அவதாரமாக நம்பப்பட்டு வழிபடப்படுகிறார்.

பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த ஆன்மிக நம்பிக்கையே இக்கோவிலின் தனித்துவத்திற்குப் பின்னணியாக அமைந்துள்ளது.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

 

25,000 எலிகளுக்கு இங்கே ஏன் இவ்வளவு மரியாதை?

இந்தக் கோவிலின் மிகப்பெரிய சிறப்பம்சமே இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் தகவலின்படி, கோவில் வளாகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. இவை உள்ளூர் மக்களால் ‘கபா’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த எலிகள் கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக நடமாடுகின்றன. பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அவற்றைக் கண்டு வியப்பதுடன், புனிதமான உயிரினங்களாகக் கருதி மரியாதை செலுத்துகின்றனர்.

25000 எலிகள் நிறைந்த கோவில் - பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு! | Indian Temple Where 25000 Rats Are Worshipped

பொதுவாக எலிகள் தொல்லை தரும் உயிரினங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இந்தக் கோவிலில் அவை தெய்வீகத் தொடர்புடையவையாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த ஆயிரக்கணக்கான எலிகளே கர்ணி மாதா கோவிலின் தனித்துவமான அடையாளமாக மாறியுளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *