கவிதைகள்

“நல்லூரான் மஞ்சம் பார்த்திடுவோம் வாருங்கள்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
     மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா.
மஞ்சத்தில் ஏறி மால்மருகன் வருகின்றான்
நெஞ்சக் கனகல்லை உருக்கிடவே வருகின்றான்
தஞ்சமென நிற்பாரைத் தாங்கிடுவான் திருக்குமரன் 
திருக்குமரன் தரிசனத்தைப் பார்ர்திடுவோம் வாருங்கள் 
 
நல்லூரான் மஞ்சம் நமக்களிக்கும் தஞ்சம்
அல்லலினைப் போக்கும் ஆறுதலை அளிக்கும்
எல்லையிலா இன்பம் எல்லோர்க்கும் கிடைக்கும்
நல்லூரான் மஞ்சம் பார்த்திடுவோம் வாருங்கள் 
 
மஞ்சத்தில் மால்மருகன் வருகின்ற அழகை
வானவரும் பார்க்க வந்திடுவார் நல்லூர்
மண்ணகத்தோர் காணாமல் வானவர்கள் பார்ப்பார்
மால்மருகன் மட்டுமே யாவரையும் பார்ப்பார்
 
வள்ளிதேவ யானையுடன் மஞ்சமேறி வருவான்
மால்மருகன் மஞ்சமது பேரழகையாய் ஜொலிக்கும்
அடியார்கள் கைகூப்பி அரோகரா என்பர்
அசைந்தசைந்து மஞ்சமது அழகொளிர வருமே !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button