உலகம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வெளிப்புறக் கட்டுமானங்கள் இடிப்பு

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த வெளிப்புறக் கட்டுமானங்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி அதிகாரிகள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தைப் பயன்படுத்தி இடித்து அகற்றியுள்ளனர்.

தூதரகத்தின் விசா பிரிவிற்கு அருகில் வரிசைகளை முறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த உள்கட்டமைப்புகள், போக்குவரத்துக் கூம்புகள் (traffic bollards) மற்றும் பாதுகாப்பு அரண்கள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட காட்சிகளில், தூதரகத்தின் வெளிப்புறச் சுவர்கள், உலோக வேலிகள், கூரைகள் மற்றும் கான்கிரீட் பாகங்கள் பலத்த சேதமடைந்து இடிபாடுகளாகக் கிடப்பது தெரியவந்துள்ளது.

எனினும், பாகிஸ்தான் சின்னம் பொறிக்கப்பட்ட தூதரகத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் சுற்றடைப்புச் சுவர்கள் சேதமின்றி பாதுகாப்பாக உள்ளன.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளை பாகிஸ்தான் அதிகாரிகள் அகற்றிய சரியாக மூன்றாவது நாளில், இந்தியத் தரப்பிலிருந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button