புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய்!

உலக புகைப்பட தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தை போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை கவுரவிக்கும் விதமாகவும் உலகெங்கிலும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1839 ஆம் ஆண்டு பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து ‘டேகுயரோடைப்’ என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். பிரெஞ்சு அரசு இதற்கான காப்புரிமையை வாங்கியதுடன், இந்த நாளைப் புகைப்படக் கலையின் தொடக்கமாக அறிவித்தது.
முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி உலகளாவிய அளவில் ஆன்லைன் கேலரி மற்றும் கண்காட்சிகள் மூலம் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது.
19 ஆம் திகதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்கு தனது மனமார்த்த வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். புகைப்பட கலைஞர்களை வீடியோ எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
![]()