நிகழ்வுகள்

வருடாந்த அப்பகஸ் பரீட்சை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில்

ஹோமெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வருடார்ந்த அப்பகஸ் பரீட்சை அட்டன் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை (12.09.2026) நடைபெற்றது.

சிறுவர்களின் மூளை விருத்தியையும் சிந்திக்கும் ஆற்றலையும் அதிக படுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட குறித்த பரீட்சையில் மலையகத்தை சார்ந்த ஊவா மாகாணம், மத்திய மாகாணம், ஆகிய பகுதிகளில் இருந்து  250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற குறித்த பரீட்சை நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் செந்தில் குமார் பெருமாளின் ஆலோசனைக்கமைய ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதன் போது நிறுவனத்தின்  உதவி இயக்குனர்  ஷியாமளா கண்ணன் மற்றும் மத்திய மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *