பலதும் பத்தும்

தாய்லாந்தில் புதிய ‘பிசாசு மலர்’ கண்டுபிடிப்பு

தாய்லாந்தின் மேற்கு பகுதியிலுள்ள தோங் பா பும் தேசிய பூங்காவில், இதுவரை அறியப்படாத புதிய வகை பூக்கும் தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

Thismia daemona எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரத்துக்கு அதன் கருமை நிறம் மற்றும் கொம்புகளைப் போன்ற அமைப்பைக் கொண்ட பூ காரணமாக ‘பிசாசு மலர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

 

இத்தாவரத்தில் பச்சையம் இல்லாததால், வழக்கமான தாவரங்களைப் போன்று ஒளிச்சேர்க்கை மூலம் உணவைத் தயாரிக்க முடியாது. மண்ணுக்கடியில் உள்ள பூஞ்சைகளிடமிருந்து ஊட்டச்சத்துகளைப் பெற்று இது வளர்கின்றது.

 

மேலும், இதுவரை 50க்கும் குறைவான தாவரங்களே கண்டறியப்பட்டுள்ளதால், இது மிகவும் அருகிய நிலையில் உள்ள இனமாக தற்காலிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *