இலங்கை

கிளிநொச்சிப் பழைய கச்சேரி முன்னால் வடகிழக்கில் காணிகளை இழந்தோரின் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று போராட்டம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, மட்டக்களப்பு, மயிலைத்தமடு, மாதவனை, இயக்கச்சி, கிராஞ்சிப் பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் கிளிநொச்சிப் பழைய கச்சேரி முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையுன் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button