உலகம்

வரலாறு காணாத உச்சம் ; 8 மாதங்களில் ரூ.3,840 லட்சம் கோடியாக உயர்ந்த அமெரிக்காவின் கடன்

அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடன், 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அமெரிக்காவின் கருவூலத்துறை, வர்த்தகம் முடியும் நேரத்தில் நாள்தோறும் நிதி அறிக்கையை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி கடந்த 18ம் திகதி வெளியான அறிக்கையில், அமெரிக்காவின் கடன்தொகை வரலாற்றில் இல்லாதபடி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

வரலாறு காணாத உச்சம் ; 8 மாதங்களில் ரூ.3,840 லட்சம் கோடியாக உயர்ந்த அமெரிக்காவின் கடன் | America S National Debt Soars To Historic High

அதாவது, அந்நாட்டின் சி.பி.ஓ, எனப்படும், நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த தகவல்களை வழங்கும் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம், 2026 நிதியாண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் கடன் 3,773 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று முன்பு அறிவித்திருந்தது.

ஆனால் 8 மாதங்களிலேயே கடன் தொகை 3,840 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.

மேற்காசியா போர்ச்சூழல், ராணுவ செலவு, சமூகப் பாதுகாப்புக்கான நிதி அதிகரிப்பு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால், நாட்டின் கடன் மீதான வட்டித் தொகை பன்மடங்கு அதிகரித்தது போன்றவையோ இதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் பொதுச் செலவினங்களைக் குறைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை கடனில் தள்ளிவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button