கவிதைகள்
மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி!…. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ——- அவுஸ்திரேலியா ……
மங்கலம் என்பது எங்கும் தங்கிட
வரமருள் என்றுமே வேண்டுவார் யாவரும்
தந்திடும் தாயாய் இருப்பாள் வரலக்ஷ்மி
வரலக்ஷ்மித் தாயைப் போற்றுவோம் வாரீர்
காத்திடு தாயே என்றுமே வேண்டிக்
காப்புக் கட்டி வேண்டுவார் பெண்கள்
மங்கலம் நிறைந்திட மங்கல மாதர்
வரமருள் என்றுமே வேண்டுவார் உருகி
குடும்பம் சிறக்க கொண்டவர் சிறக்க
வைத்திடு என்றுமே வேண்டுவார் மாதர்
மாங்கல்யம் நிலைக்க வரமருள் என்று
வேண்டுவார் யாவரும் வரலக்ஷ்மித் தாயை
அஷ்ட செல்வங்களும் அருள்வாள் வரலக்ஷ்மி
அவளின் பாதத்தை அனைவரும் பற்றுவோம்
பற்றுவார் வாழ்வில் மங்கலம் நிறையும்
மங்கலம் ஆக விளங்கிறாள் வரலக்ஷ்மி !
![]()