நிகழ்வுகள்

நல்லைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 25 தினங்கள் காலை , மாலை திருவிழாக்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-26 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.45 மணியளவில் மஞ்சத் திருவிழாவும், அடுத்த மாதம் 3 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.45 மணியளவில் கார்த்திகைத் திருவிழாவும், 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் கைலாசவாகனத் திருவிழாவும், 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் வேல் விமானத் திருவிழாவும், 07 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-04.45 மணியளவில் ஒருமுகத் திருவிழாவும், 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை- 04.45 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 09 ஆம் திகதி புதன்கிழமை காலை 6.15 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-06.15 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-05.30 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button