பலதும் பத்தும்

பேராதெனிய தாவரவியல் பூங்காவில் மின்சார வாகனங்கள்

பேராதெனிய அரச தாவரவியல் பூங்காவிற்கு அரசாங்கத்தின் விசேட நிதிஒதுக்கீட்டின் கீழ் 10 புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேராதெனிய அரச தாவரவியல் பூங்காவிற்கு பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கவும் உதவும் நோக்கிலும் 10 புதிய மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முழுக்க முழுக்க அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி குறித்த வாகனங்களை பேராதெனிய தாவரவியல் பூங்கா நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்.

இந்தத் திட்டம், பூங்காவிற்குள் நீண்ட காலமாக இருந்து வந்த போக்குவரத்துத் தேவையை நிவர்த்தி செய்வதாகவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி, இந்தப் பரந்த வளாகத்தை வசதியாகச் சுற்றிப் பார்க்க உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இப்பூங்கா முழுவதும் எளிதில் சென்றடைய இந்த மின்சார வாகனங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இலங்கையின் ஏனைய பிரபலமான சுற்றுலாத் தலங்களிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button