இலங்கை

மகிந்தவுக்கு கிடைத்துள்ள சக்தி – நாட்டு மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தங்களுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்காலத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.

அன்றாட உணவைப் பெற்றுக் கொள்வது கூட இன்று மக்களுக்கு நெருக்கடியாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறையில்  நடைபெற்ற பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தை கோரும் மகிந்த
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில், தான் உள்ளிட்ட குழுவினருக்கு நாட்டை இந்த நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான சக்தி உள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு அந்த சக்தி இருக்கிறது, எங்களிடம் அதிகாரத்தைத் தாருங்கள். நாங்கள் செய்து காட்டுகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button