இலங்கை

நூலகத்தை திறக்க ஜனாதிபதியுடன் இணைந்த சுமந்திரனால் பாடகரை விடுவிக்க பேச முடியவில்லை

மட்டக்களப்புக்கு சென்று ஜனாதிபதியுடன் இணைந்து நூலகத்தை திறக்க முடிந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனால், சொல்லிசை பாடகர் சங்கீர்த்தசனின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் பேச முடியவில்லை என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராக இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றி அவரை சாதாரண குற்றச்சாட்டில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலைலயில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தாம் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் மட்டக்களப்புக்கு சென்று சுமந்திரனால் நூலகத்தை திறக்க முடியுமென்றால் ஏன் அவரால் ஜனாதிபதியுடன் கதைத்து சங்கீர்த்சனை விடுவிக்க முடியாது. எல்லாம் நாடகமே. சுமந்திரனால் அதை செய்ய முடியாது. சங்கீர்தசனை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button