உலகம்

பற்றி எரியும் கப்பல்: அமெரிக்க தாக்குதலில் இந்தியர்கள் பலி – இந்திய அரசு கடும் சீற்றம்

எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஓமன் கடலோரத்திற்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

பாலாவ் கொடி ஏந்திய செட்​டெபெல்​லோ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கப் படை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா மற்றும் தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் அடங்குவதாக இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிராந்தியத்தில் பதற்றத்தை குறைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் இந்​திய கப்​பல் போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோ​வால் கூறுகை​யில், ‘‘செட்டோபெல்லோ என்ற எண்​ணெய் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​தது துரதிர்ஷ்டவசமானது.

இந்த துயர​மான நேரத்​தில் உயி​ரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு மோடி அரசு துணை நிற்​கிறது.

மீட்​கப்​பட்ட இந்​திய மாலுமிகள் உடனடி​யாக நாடு திரும்​புவதை உறுதி செய்ய அதிகாரி​களுக்கு உத்​தர​விட்​டுள்ளேன்.

உயி​ரிழந்த மாலுமிகளின் உடல்​கள் இறுதிச் சடங்​கு​களுக்​காக உடனடி​யாக இந்​தியா கொண்டு வரப்​படும்’’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button