உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணையின் தடைகளை தடுக்கக் கோரி பெரும் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் தேவையற்ற தலையீடுகளையும் தடைகளையும் தடுக்கக் கோரி நீர்கொழும்பில் நேற்று வியாழக்கிழமை காலை நீர்கொழும்பு- கொழும்பு பிரதான வீதியில் கட்டுவபிட்டிய சந்தியில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.
கட்டுவபிட்டிய தேவாலயத்தில் நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் குழுவினரால் இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக இடம்பெரும் சட்டரீதியான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்துவதை உடன் நிறுத்து விசாரணையாளர்களை, சட்டமா அதிபரை அச்சுறுத்துபவர்களை உடன் கைது செய்” எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாக்குதலில் உயிர்நீத்த தமது உறவுகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தியதுடன்
கத்தோலிக்கர் என கூறிக்கொள்ளும் என்ஜீஓ காகங்கள் கத்தோலிக்க சபையை அவமதிப்பதை கண்டிக்கிறோம், விசாரணைகள் குழப்பும் மோசடிக்காரர்களை இனம்கான்போம், கொலையாலிகளை பாதுகாப்பவர்களுக்கு ஊரில் இடம்கொடுக்காதீர், விசாரணை உரிய பாதையில் இனவாதிகள நடுவீதியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டு, விசாரணைகளுக்கு இடையூறு வேண்டாம் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.
![]()